விளாத்திகுளத்தில் லிஃப்ட் கேட்டு பைக்கில் ஏறிய 17 வயது சிறுவன், இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கேசவன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜ். இவர் நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மீரான் பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கார்த்திக் ராஜிடம் லிஃப்ட் கேட்டு பைக்கில் ஏறிச் சென்றுள்ளார். அப்போது, பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கார்த்திக் ராஜை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் ஏ.எஸ்.பி ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார், கொலை செய்யப்பட்ட கார்த்திக் ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த சிறுவனை கைது செய்தனர். தொடர்ந்து அந்த சிறுவனிடம் விசாரணை நடந்து வருகிறது.