fbpx

#JOBS ALERT..!! மாதம் ரூ.35,100 வரை சம்பளம்..!! கிராம உதவியாளர் பணி..!! முழு விவரம் உள்ளே..!!

சேலம் மாவட்டத்தின் எடப்பாடி, கெங்கவல்லி, காடையாம்பட்டி, ஓமலூர், ஏற்காடு, சுங்கரி உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம்.

#JOBS ALERT..!! மாதம் ரூ.35,100 வரை சம்பளம்..!! கிராம உதவியாளர் பணி..!! முழு விவரம் உள்ளே..!!

பணி விவரம்:

கிராம உதவியாளர் (Village Assitant)

காலிப்பணியிட விவரம்:

எடப்பாடி – 2

கெங்கவல்லி – 2

காடையாம்பட்டி – 3

ஓமலூர் – 8

ஏற்காடு – 6 

சங்ககிரி – 7

கல்வித் தகுதி:

5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:

* விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

* விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எடப்பாடி, கெங்கவல்லி, காடையாம்பட்டி, ஓமலூர், ஏற்காடு, சுங்கரி ஆகிய தாலுகா பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்..

இந்தப் பணிகளுக்கு ஊதிய விகிதம் – சிறப்பு கால முறை ஊதியம் : ரூ11,100 முதல் ரூ. 35,100 வரை வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு :

01.07.2022 அன்று அனைத்து பிரிவினர்களுக்கும் குறைந்தப்பட்சமாக 21 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வுகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் காணலாம்.

இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 07.11.2022.

வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனறி தேர்வு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நாள் – 30.11.2022

நேர்முகத் தேர்வு நாள் – 15.12.2022 மற்றும் 16.12.2022

விண்ணப்பிக்கும் முறை:

கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தமிழக அரசின் இணையதளமான https://www.tn.gov.in வருவாய் நிர்வாகத் துறையின் இணையத்தளமான https://cra.tn.gov.in மற்றும் சேலம் மாவட்ட அதிகாரப்பூர்வமான இணைத்தள முகவரியான https://salem.nic.in மூலம்  07.11.2022  வரை மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு முறை மற்றும் இதர விவரங்களை சேலம் மாவட்ட https://salem.nic.inஎன்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு தாலுக்காவிற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பின் முழுவிவரத்தை தெரிந்து கொள்ள https://salem.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள பக்கத்தில் காணலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கு https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-171 லிங்கை கிளிக் செய்யவும்.

எடப்பாடி தாலுக்கா அறிவிப்பிற்கு https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2022/10/2022101413.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Chella

Next Post

தமிழக அரசு வேலை... மாதம் ரூ.13,000 வரை ஊதியம்..! உடனே விண்ணப்பிக்கவும்..!

Wed Nov 2 , 2022
தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Radiographer, Physiotherapist, Multipurpose Health Worker, Security Guard பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில், B.Sc Radiography / DRTT / DRDT / Degree / Certificate Course/ Bachelor of Physiotherapy/ […]

You May Like