நாகர்கோவிலில் வலைத்தலங்கள் மூலமாகவே பெண்களுக்கு வலை விரித்து 120 பெண்களை ஏமாற்றிய காசி என்பவரின் நண்பரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
காசி , நாகர்கோவிலில் ஆன்லைன் மூலமாக பெண்களிடம் பேசி , பழகி காதல் வார்த்தைகளை அள்ளி வீசி வலையில் விழ வைத்து பின்னர் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளான். இது போன்று 102 பெண்களிடம் காதல் மன்னன் தன்கைவரிசையை காட்டியுள்ளானர். இதையடுத்து அவன் கைது செய்யப்பட்டான். 2020ம் ஆண்டு குண்டர் சட்டமும் பாய்ந்தது. காசி மீது பாலியல் வழக்குகளை சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருகின்றது. இவருக்கு உறுதுணையாக 3 நண்பரகள் இருந்தனர். ஜினோ ,தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கவுதம் என்பவர் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி மறைவாக இருந்தான்.
இந்நிலையில் இவன் குவைத்தில் வேலை பார்த்து வந்ததாக கூறப்பட்டது. காசியின் நண்பர் கவுதம் , காசி சொல்பேச்சை கேட்டு ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வான். இதனால் அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு கண்காணித்து வரப்பட்டது.
குவைத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கவுதம் வந்திரப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கேரள விமான நிலையம் சென்று கைது செய்த போலீசார் நாகர் கோவில் அழைத்து வரப்பட்டனர். அவனுக்கு 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.