தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட நகையை அடகு வைத்துவிட்டு பின்னர் பணத்தை இழந்த இளைஞர் அம்மாவுக்கு உருக்கமான குரல் பதிவு செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே ஸ்ரீவைகுண்ட பெருமாள் புரம் பகுதியை சேர்ந்தவர் பூபதிராஜா (27). தனியார் மின்சக்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் உள்ளூரில் எலக்ட்ரிக்கல் வேலையும் செய்து வந்தார். 23ம் தேதி வெளியே வேலை இருப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நெடு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் வீட்டில் இருந்தவர்கள் தேடியுள்ளனர். அவரது செல்போனுக்கு அழைப்பு விடுத்தபோதும் அழைப்பை ஏற்கவில்லை. எனவே இவர்களுக்கு சொந்தமாக மற்றொரு வீடு அதே பகுதியில் உள்ளது.அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் . அவரது செல்போனில் ஆன்லைனில் ரம்மி ஆடியுள்ளார். இதை விசாரணையில் போலீசார் அறிந்து கொண்டனர். அவரது செல்போனை சோதனை செய்த போது வாட்ஸாப்பில் பெற்றோருக்கு குரல் பதிவையும் அனுப்பி உள்ளனர்.
’’என்னை மன்னிச்சுடும்மா , ஏகப்பட்ட கடன் வாங்கி இருக்கேன். ஒரு செயின் எடுத்து ரூ.40,000 க்கு அடகு வைத்துவிட்டேன். ஒன்றலை லட்சம் லோன் எடுத்ததில் 30ஆிரம் ரூபாய் நான் எடுத்துவிட்டேன். இந்த மாசம் டியூ கட்ட வேணடிய பணத்தையும் 6000 எடுத்து செலவு பண்ணிட்டேன். ’’ என கூறியிருக்கன்றார்.
பூபதியின் செல்போனில் இருந்து குறுந்தகவல் அனுப்பியதும் செல்போனை அவர் இன்டெர்னெட்டை ஆப் செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.