திருமணமாகி குழந்தை பிறந்த பின்னரும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனுக்கு தொல்லை கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் கழுத்தை நெறித்து கொலை செய்தான்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் அருகே ராமாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரேஷ்மா லதா(21). சென்னையை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் தலைப்பிரசவத்திற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு வந்திருக்கின்றார். குழந்தை பிறந்து 5 மாதங்களாகியும் கணவர் வீட்டுக்கு செல்லாமல் தாய் வீட்டிலேயே இருந்துவிட்டார்.
இந்நிலையில் ரேஷ்மா லதா கடந்த 22ம் தேதி கால்வாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சம்பவம் நடந்தபோது குமரன் என்ற வாலிபருடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்ததாக ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த நபரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது, எனக்கும் ரேஷ்மாவுக்கும் திருமணத்திற்கு முன்பே பழக்கம் இருந்தது. இருவரும் காதலித்தோம். தனிமையில் இருந்துள்ளோம். உல்லாசமாக இருந்தோம் ஆனால், இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்ததால் உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்த்து ரேஷ்மாவுக்கு திருமணம் முடிந்தது. பின்னர் இந்த பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் எனக்கு என் வீட்டில் திருமணம் செய்து வைத்துவிட்டனர். திருமணத்திற்கு பின்பும் நாங்கள் இருவரும் எங்கள் காதலை தொடர்ந்தோம். ஆனால், பிரசவத்திற்கு வந்த ரேஷ்மா என்னை திருமணம் செய்து கொள் என கட்டாயப்படுத்தினார். என் மனைவி 5 மாதம் கர்ப்பவதியாக இருக்கின்றாள். இந்நிலையில் ரேஷ்மாவின் தொந்தரவை தாங்க முடியவில்லை. எனவே அவளை கழுத்தை நெறித்து கொன்றேன். பின்னர் கால்வாயில்வீசினேன். என்றார்.
கைக்குழந்தையையும், கணவரையும் விட்டு காதலனுடன் ஓடிவிடலாம் என நினைத்து சென்ற பெண் கால்வாயில் சடலமாகக் கிடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட குமரன் சிறையில் அடைக்கப்பட்டார்