கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூட்டைகளில் சில்லரைகளை கொண்டு வந்து பத்து ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் பைக் வாங்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே ஓசூரில் கெலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் (31) . இவர் தனக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் நிர்வாக மேலதிகாரியாக வேலை பாரத்த்து வருகின்றார். டி.வி.எஸ்.அப்பாச்சி வாங்குவதற்காக கடந்த 3 ஆண்டுகளாக பத்து ரூபாய் நாணையம் சேர்த்துள்ளார். சுமார் ரூ.1,80000 எடுத்து வந்து பைக்கை வாங்கிச் சென்றார் . இதற்காக நண்பர்களிடமும் நாணயங்களை வாங்கி சேகரித்து வைத்திருக்கின்றார். தான் சேகரித்து வைத்திருந்த ஒரு லட்சத்து 80,000 ரூபாய் மதிப்புள்ள காயின்களை ஷோரூமுக்கு கொண்டு வந்தார்.
பின்னர் அதை ஷோ ரூமில் கொட்டினார் பைக் வாங்கிய பின்னர் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து சுமார் 3 மணி நேரமாக எண்ணி கணக்கு சரி பார்த்தனர். இது பற்றி அவர் கூறுகையில் , ’’ பத்து ருபாய் நாணயம் பல இடங்களில் மக்கள் வாங்குவதில்லை. அது செல்லாக்காசு என கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைகின்றார்கள். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தவே நாணயங்களை சேர்த்து வைத்தேன். ’’ என்றார்.