தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளுக்குப் பலரும் அடிமையாகி வருகின்றனர். இதனால், பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எனவே, தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகப்படியாக எழுந்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த மதன் குமார் (25) என்ற இளைஞர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் நடத்திய விசாரணையில், மதன் குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்தாக கூறப்படுகிறது. வேலையில்லாத காரணத்தினாலும், கடன் பிரச்சனை அதிகமானதாலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.