80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கம்பூரை சேர்ந்தவர் மூதாட்டி பேச்சியம்மாள் (80). இவர், தனது வீட்டில் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த நபர் திடீரென மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது, மூதாட்டி அலறி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஓட்டி வந்த நிலையில், ஆட்கள் வருவதை கண்டவுடன் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பின்னர், மயக்க நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே ஊரைச் சேர்ந்த பாண்டி (55) என்பவர் மூதாட்யை பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 80 வயது முதாட்டியை 55 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.