முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் வீட்டில் முக்கியமான ஆவணங்களைத் தேடி வந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்க்கு சொந்தமான பண்ணை வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் பண்ணை வீடு அமைந்துள்ளது. 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவரும் எப்போது ஜைஜாண்டிக்கான பாதுகாவலர்கள் வலம் வந்து கொண்டே இருக்கும் பண்ணை வீட்டில் காவலுக்காக பெரிய பெரிய நாய்கள் வளர்க்கப்படுகின்றது. இந்த பண்ணை வீட்டில்தான் கட்சிக்காரர்களின் கூட்டம் நடைபெறும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் நடைபெற்றது நேற்று இது தொடர்பாக போலீசில் புகார்அளிக்கப்பட்டது. பீரோ எதுவும் உடைக்கப்படாமல் நகை, பணத்தை திருடிச் செல்லாமல் வெறும் 54 இன்ச்சில் இருந்த எல்.இ.டி. டிவியை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அத்தனை பாதுகாப்பையும் மீறி ஏறிக்குதித்து உள்ளே நுழைந்து மாடி வழியாக நுழைந்து வந்த கொள்ளையர்கள் வேறு ஏதோ முக்கிய ஆவணங்களை திருட வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த திருட்டில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் அதிமுக தலைமை விவகாரத்தில் நிலவி வரும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திருட்டு சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.