தமிழகத்தில் சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பா.ஜ.க. தமிழகத்தின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலையில் சென்ற காரில் இருந்த சிலிண்டரில் எரிவாயு கசிந்து வெடித்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ஒருவர் பலியானார். விபத்தில் கார் இரண்டு துண்டாகி சிதறியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் …
தமிழக மாநில பா.ஜ.க. தலைவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.மக்களின் அச்சத்து போக்கும் வகையில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காவல்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்தது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகம் மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடம் இருநு்து நம் மக்களை காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதை கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்புகின்றோம் என பதிவிட்டிருந்தார்.