fbpx

’ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் இதை வாங்கிக் கொள்ளலாம்’..! – ராதாகிருஷ்ணன் விளக்கம்

நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி வைத்து கொள்ளலாம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் கல்லுக்குழி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில், தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ரேஷன் பொருள் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர், ரேசன் பொருட்கள் தேவையில்லை என்றால் அவர்களுக்கு கெளரவ அட்டை என்கிற முறை உள்ளது என்றார். இதனை தமிழ்நாட்டில் 60 ஆயிரம் பேர் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். கௌரவ அட்டை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைத்து ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

’ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் இதை வாங்கிக் கொள்ளலாம்’..! - ராதாகிருஷ்ணன் விளக்கம்

திருச்சி மாவட்டத்தில் 75 ரேஷன் கடைகளை புதுப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கடை கட்டும் போது அதில் கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், முதியோர் அமரும் வசதிகளோடு கட்டப்படும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், கூட்டுறவுத்துறையில் 3,997 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இந்தாண்டு மே 24ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரம் ஹெக்டர் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த பகுதியில் தற்போது 40 நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை என்பதால், 10 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது என்றார்.

’ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் இதை வாங்கிக் கொள்ளலாம்’..! - ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழ்நாட்டில் தற்போது பதிமூன்றரை லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்க குடோன் உள்ளது. மேலும், 20 இடங்களில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் பாதுகாப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கடையில் பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் இருக்கும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

Chella

Next Post

கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை... கர்நாடக சட்டப்பேரவையில் புதிய சட்டம் நிறைவேற்றம்...

Thu Sep 22 , 2022
காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், கட்டாய மதமாற்ற தடை மசோதாவை கர்நாடக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. கர்நாடகா அரசு, கட்டாய மத மாற்ற தடை மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த மசோதாவை சட்டமன்றக் குழு கடந்த வாரம் அனுமதித்தது. இந்நிலையில் கட்டாய மதமாற்ற மசோதா நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. […]

You May Like