fbpx

திருட்டில் சிக்கிய இருவரை போலீசிடம் ஒப்படைத்த மக்கள்..! சில மணி நேரங்களில் விடுவித்ததால் மீண்டும் திருட்டு..!

திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசிடம் பொதுமக்கள் பிடித்து கொடுத்த நிலையில், அவர்களை கைது செய்யாமல் விடுவித்ததால், அன்றே மீண்டும் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் பொதுமக்கள் உதவியோடு போலீசாரால் வைக்கப்பட்ட பல சிசிடிவி கேமராக்கள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு செயல் இழந்து காணப்படுகின்றன. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு இருசக்கர வாகன திருட்டு அரங்கேறி வந்த நிலையில், அந்த பகுதியில் துணி தேய்க்கும் தொழில் செய்து வருபவரின் மகன் வீடு தேடிச்சென்று தேய்த்த துணிகளை கொடுப்பது போல நோட்டமிட்டு வீட்டில் இருந்து செல்போன், பணப்பை, சைக்கிள் உள்ளிட்டவற்றை தூக்கிச் சென்றதாக கூறப்படுகின்றது.

திருட்டில் சிக்கிய இருவரை போலீசிடம் ஒப்படைத்த மக்கள்..! சில மணி நேரங்களில் விடுவித்ததால் மீண்டும் திருட்டு..!

சம்பவத்தன்று வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளையும், அங்கு கிடந்த பெரிய இரும்பு குழாய்களையும் தூக்கி சுற்றுச்சுவரை தாண்டி வீசிய போது ஒருவர் தப்பி ஓட, ஒருவன் கையும் களவாக சிக்கிக் கொண்டான். அவனிடம் விசாரித்த போது உடன் வந்தவனை அடையாளம் காட்டினான், தகவல் அறிந்து வந்த போலீசார், அருகில் ஒரு கடையில் பதுங்கி இருந்த ‘அயர்ன்’ கார்த்திக் என்ற அந்த இளைஞரை பிடித்துச் சென்றனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணா என்பவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். போலீசாரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த நிலையில், அந்த இருவர் மீதும் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் விடுவித்து அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

திருட்டில் சிக்கிய இருவரை போலீசிடம் ஒப்படைத்த மக்கள்..! சில மணி நேரங்களில் விடுவித்ததால் மீண்டும் திருட்டு..!

வெளியில் வந்த அடுத்த சில மணி நேரங்களில் பாலாஜி நகரில் உள்ள பல்மருத்துவரின் வீட்டுக்குள் புகுந்துள்ளான். அங்கு தூங்கிக் கொண்டிருந்த காவலாளியின் செல்போன் மற்றும் ரொக்கம் பணத்தை அவன் களவாடிச்சென்ற காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளன. இது குறித்தும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை மட்டுமல்ல, சென்னையில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படுகின்றதா? என்பதை அவ்வப்போது கவனித்தால் குற்ற வழக்குகளில் போலீசார் எளிதாக துப்பு துலக்கவும், திருடர்களை பிடிக்கவும் உதவியாக இருக்கும் அதே நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவோருக்கும் கேமராவை பார்த்தால் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சம் ஏற்படும்.

Chella

Next Post

அதிர்ச்சி..!! இரண்டு வருடங்களாக வீட்டுக்குள்ளேயே கிடந்த பெண் சடலம்..! எலும்புக்கூடாக மீட்பு..!

Sun Jul 24 , 2022
லண்டன் குடியிருப்பில் ஷீலா செலியோன் (58) என்ற பெண், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த நிலையில், தற்போது அவரது வீட்டிலிருந்து எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். லண்டனில் ஷீலா செலியோன் தனியாக வசித்து வந்த நிலையில், உயிரிழந்து இரண்டு வருடம் கழித்துத்தான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அவர் வசித்துவந்த வீட்டை வீட்டுவசதி சங்கம் நிர்வகித்து வந்தது. அவரின் ஒரு மாத வாடகை […]
அதிர்ச்சி..!! இரண்டு வருடங்களாக வீட்டுக்குள்ளேயே கிடந்த பெண் சடலம்..! எலும்புக்கூடாக மீட்பு..!

You May Like