காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது, மாணவி எரிந்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், மாணவியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். ஆனால், மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், உயிரிழப்பதற்கு முன்பாக மாணவி மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தான் முனிரத்தினம் என்பவரை காதலித்ததாகவும், அவர் திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் மாணவி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.