மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் சரவெடியை வெடிக்கவேண்டாம் என்று முக்கியமான வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் .. தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் திருநாள். சிறுவர்கள் , பெரியவர்கள் என புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வார்கள் . அதே நேரத்தில் , பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றி உள்ள நிலம் , நீர் , காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.
பட்டாசு வெடிப்பதால் உண்டாகும் சப்தம் ஒலி மாசு ஏற்படுத்துகின்றது. அதிகப்படியான ஒலி காற்று மாசு ஏற்படுவதால் சிறு குழந்தைகள் , பெரியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றார்கள்.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது இன்று வெளியிட்டுள்ள ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது. மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலும் சரவெடியை பயன்படுத்த வேண்டாம் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளது.