fbpx

பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் பலாத்காரம்..!! மாணவியிடம் மனதை கொடுத்த நர்சரி ஓனர்..! கர்ப்பத்தால் ஆடிப்போன பெற்றோர்..!

9ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய நர்சரி உரிமையாளரை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த நர்சரி உரிமையாளர் சேகர் (50). இவரது வீட்டின் அருகே வசித்து வரும் தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், மாணவியை பள்ளிக்கு அழைத்துச் செல்ல தம்பதியினருக்கு நேரம் கிடைக்காத சமயங்களில், சேகர் அந்த மாணவியை காரில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அடிக்கடி அந்த மாணவியை அழைத்துச் செல்லும்போது, சேகருக்கு மாணவி மீது ஆசை வந்துள்ளது. இதையடுத்து, மாணவியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் பலாத்காரம்..!! மாணவியிடம் மனதை கொடுத்த நர்சரி ஓனர்..! கர்ப்பத்தால் ஆடிப்போன பெற்றோர்..!

இந்நிலையில், மாணவியின் உடல்நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர், மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பராத பெற்றோர் அதிர்ச்சியடைந்து, ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், மாணவிக்கு சேகர் கடந்த இரண்டு வருடங்களாகவே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியில் எதுவும் சொல்லக்கூடாது என்றும் சேகர் மிரட்டியதால், மாணவியும் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், சேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க… கணவன் இல்லாத நேரத்தில் மனைவியை கட்டிலுடன் கைது செய்த இன்ஸ்பெக்டர்..!! ஒளிந்திருந்து பிடித்த கணவன்..!

Chella

Next Post

புதுச்சேரியில் இனி இது கட்டாயமக்கப்படுகின்றது… ! விதிமுறையை பின்பற்றறாவிடில் அபராதம்

Sun Oct 9 , 2022
பல மாநிலங்களில் பின்பற்றப்படுவது போலவே யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் இதை பின்பற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீப காலமாக விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் இதைத் தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது […]

You May Like