fbpx

நடிகையின் ரூ.20 கோடி சொத்து மீட்பு…

போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட பிரபல நடிகையின் நிலத்தை புதிய சட்டத் திருத்தம் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் மீட்டுக் கொடுத்துள்ளார்.

பத்திரப்பதிவு துறையில் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடமே நிலத்தைக் கொடுக்கக் கூடிய சட்டத் திருத்த மசோதா அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்டத் திருத்தத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்த நிலையில் கடந்த காலங்களில் நில அபகரிப்பாளர்களால் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட சொத்துகளை மீட்டு உண்மையான உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவுத்துறை அதிகாரிகளே ரத்து செய்யும் சட்ட திருத்தத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக, ஐந்து பேருக்கு இன்று நில உரிமை ஆவணங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

‘உயர்ந்த மனிதன்’, ‘நிறைகுடம்’, ‘குலமா குணமா’, ‘வசந்த மாளிகை’, ‘கண்ணன் என் காதலன்’, ‘தலைவன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் வாணிஸ்ரீ. சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் 20 கோடி ரூபாய் மதிப்புடைய இவரின் 9000 சதுர அடி நிலத்தைப் போலி ஆவணம் தயாரித்து மோசடி கும்பல் விற்பனை செய்திருந்தது.

தற்போது புதிய சட்டம் அமலுக்கு வந்த நிலையில் போலி பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டு அவருக்கு நில உரிமைக்கான ஆவணம் வழங்கப்பட்டது. போலி பத்திரப்பதிவு செய்யப்படுவதால் நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடி பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு தங்களது சொத்துகளை பெறும் நடை முறை இருந்துவந்தது. இதனால் ஏற்படும் காலவிரயத்தைத் தடுக்க தமிழக அரசு சார்பில் பதிவு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

உங்கள் சேமிப்பு கணக்கில் ரூ.10000க்கும் மேல் பணம் எடுக்கபோறீங்களா? விதிமுறைகளை தெரிஞ்சுக்கங்க…

Wed Sep 28 , 2022
அஞ்சலக சேமிப்பு கணக்கில் ரூ.10,000க்கும் மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சகம் சுற்றறிக்கையை வெளியிட்டள்ளது. அதில் இந்த புதிய விதிமுறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலக சேமிப்பு கணக்கில் நீங்கள் ரூ.10000 எடுக்க வேண்டும் என்றார் அவர்களது கணக்கு சரிபார்க்கப்படும். ஆதார் அட்டை போன்ற ஏதாவது ஒன்றை நீங்கள் காட்ட வேண்டும். இதுமோசடிகளைத் தடுக்க இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு முக்கியமான […]

You May Like