fbpx

விதிமீறி பட்டாசு வெடித்தால் புகார் கொடுங்கள்… காவல்துறை ஆணையர் அறிவிப்பு..

தீபாவளியன்று உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்தாலோ அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தாலோ புகார் அளிக்கலாம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையொட்டி , சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தியாகராய நகர் , புரசை வாக்கம் கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவார் ஆய்வு செய்தார்.
கோயம்பேடு பகுதியில் நடைபெற்ற ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயம்பேடு பகுதியில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சிசிடிவி, மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சகிதம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
இரவு போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் போக்குவர்த்து காவல்துறை போலீசார் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். பட்டாசு கடைகளின் உரிமங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாக முறையான உரிமங்கள் இல்லாதவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தீபாவளி நேரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தை கடந்து பட்டாசு வெடித்தால் 112 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சென்னை காவல்ஆணையர் கூறியுள்ளார்.

Next Post

கணவரால் கள்ளக்காதலுக்கு பிரச்சனை.... காதலனை வைத்தே கணவர் கொலை ...

Sat Oct 22 , 2022
தாலிகட்டிய கணவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலனை வைத்தே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வேடசந்தூர் சந்தைப் பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார். இவரது மனைவி விஜயசாந்தி . இத்தம்பதிக்கு ஒரு மகன் , ஒருமகள் உள்ளனர். இவர் இரும்புக் கடை ஒன்றில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றினார்.ஒரு வாரத்திற்கு முன்பு தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. விஜயசாந்தியை அவரது கணவர் […]

You May Like