fbpx

வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.2,400 ஊக்கத்தொகை ! இந்த மாவட்டத்தில் மட்டும்…

வேலையில்லாத இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,400 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்யியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது..வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.09.22 அன்றை தேதியில் 5 ஆண்டுகள் முடிவடைந்த முறையாக பள்ளியில் 9ம் வகுப்பு , பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற  மாணவர்கள் மேல்நிலை வகுப்பு (12ம் வகுப்பு) பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் வேலை வாய்ப்பற்ற  இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு , மேல்நிலை வகுப்பு (12ம் வகுப்பு ) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.9.2022ல் ஓராண்டு முடிவடைந்து பதிவுதாரர்கள் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும் , இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு வயது வரம்பு எதுவும் இல்லை. அரசின் முதியோர் உதவித் தொகை பெறுபவர்கள் , அவர்களுக்கு வேலை வாய்ப்பற்ற உதவித் தொகை பெற தகுதியில்லை. பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயல்பவராக இருக்கக்கூடாது.

Next Post

தீபாவளிக்கு ரிலீசாகும் கார்த்தி நடித்த ’சர்தார்’

Thu Oct 6 , 2022
வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் பெரும் பாராட்டுக்களை பெற்ற கார்த்தியின் ’’சர்தார் ’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றது. மித்ரன் இயக்கத்தில் வெளியாக உள்ள சர்தார் திரைப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரது நடிப்புக்கு வரவேற்பு இருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த வரும் படங்களில் கூடுதல் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டுள்ளது. விருமன் திரைப்படத்திலும் இவரது நடிப்பு வரவேற்பு பாரட்டுக்களைப் பெற்றதோடு வசூலில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரது நடிப்பில் சர்தார் […]

You May Like