fbpx

தீபாவளி சீட்டு நடத்திய வெள்ளி வியாபாரி குடும்பத்துடன் ஓட்டம்..!! ரூ.10 கோடி வரை மோசடி..!!

தீபாவளி சீட்டு நடத்தியவர் குடும்பத்துடன் தலைமறைவானதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்,

சேலம் மாநகர் குகை அருகே பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (72). இவரது மகன் ஆனந்த்பாபு (38). வெள்ளி மற்றும் தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், அப்பகுதியை சுற்றியுள்ள மக்களிடம் சிறுசேமிப்பு சீட்டும் நடத்தி வந்துள்ளார். வெள்ளி சீட்டு, தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு என பல்வேறு வகையான சீட்டுகளை கடந்த 10 ஆண்டுகளாக அவர் நடத்தி வந்துள்ளார். இவரிடம் சேலம் செவ்வாப்பேட்டை, குகை, லைன்மேடு, அரிசிபாளையம், கிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சீட்டு பணம் செலுத்தி வந்துள்ளனர்.

தீபாவளி சீட்டு நடத்திய வெள்ளி வியாபாரி குடும்பத்துடன் ஓட்டம்..!! ரூ.10 கோடி வரை மோசடி..!!

இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருந்து, 52 வார தீபாவளி சீட்டுகள் முடிந்த நிலையில் அதற்கான பணம் தருவதில் காலதாமதம் செய்து வந்துள்ளார். சீட்டு போட்டவர்கள் கொடுத்த நெருக்கடியை அடுத்து அனைவருக்கும் கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று பணம் கொடுப்பதாக கூறி, ஒரே நாளில் வர சொல்லிவிட்டு அன்று குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, அங்கு வந்த பொதுமக்கள் ஆனந்த்பாபு தலைமறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், இது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சென்று புகார் அளித்தனர். இவர் கடந்த வாரம் வரை சீட்டுக்காக பணம் வசூல் செய்து வந்துள்ளதாகவும், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கும், குடும்ப பிரச்சனைகளுக்கு சிறுக சிறுக சேர்த்து சீட்டு போட்டு வந்த நிலையில், அனைவரையும் ஏமாற்றிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர். இவரிடம் சுமார் 10 கோடி ரூபாய் வரை ஏமாந்துவிட்டதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள், எப்படியாவது இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, ஆனந்த்பாபு குடும்பத்தார் செய்து கொடுத்த வெள்ளி, தங்க ஆபரணங்களுக்கு கூலி கொடுக்க வேண்டிய, 10-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், கூலி கொடுக்கவில்லை எனவும் தீபாவளி நெருங்குவதால் சீட்டு போட்டவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாலும் மன உளைச்சலில், ராமமூர்த்தி, அவரது மனைவி கஸ்துாரி, மகன் ஆனந்தபாபு, அவரது மனைவி ஐஸ்வர்யா, அவர்களது மகள்கள் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை வீட்டை பூட்டிச்சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராமமூர்த்தியின் மகளான, குகையை சேர்ந்த சாந்தாவும் (39) நேற்று செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கைப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள குடும்பத்தினரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Chella

Next Post

கைதாகிறார் முன்னாள் பிரதமர்..? பிடிவாரண்ட் உத்தரவு..!! குவிந்த தொண்டர்கள்... குவியும் போலீஸ்..!!

Sun Oct 2 , 2022
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்படலாம் என்பதால், அவரது வீட்டின் முன் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கான் அரசு கவிழ்ந்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி நிறுவப்பட்டது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவரது ஆதரவு எம்பிக்கள் அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா […]
கைதாகிறார் முன்னாள் பிரதமர்..? பிடிவாரண்ட் உத்தரவு..!! குவிந்த தொண்டர்கள்... குவியும் போலீஸ்..!!

You May Like