திமுக பொதுக்குழு உறுப்பினரான ஜெயக்குமாரை 3 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் தாக்கி கொலை செய்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானுர் அடுத்த கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் திமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவரது தாயார் முன்னால் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். நேற்றிரவு தனது சொந்த வேலை காரணமாக கோட்டக்கரையில் இருந்து திருசிற்றம்பலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஜெயக்குமாரை வழிமறித்தனர். இதை சுதாரித்து கொண்ட ஜெயக்குமார் அவர்களிடம் இருந்து தப்ப முயன்றார். அப்போது அந்த கும்பல், ஜெயக்குமாரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

காயமடைந்த ஜெயக்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.