12 வயதான சிறுவன் ஒருவன், சேலம் அஸ்தம்பட்டியில் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சிறுவன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளான். மேலும், அவர்களுடன் சிறுவனின் தாய் மாமன் மற்றும் தாத்தா வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று சிறவன் லேப்டோபில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதனை பார்த்த சிறுவனின் தாய் மாமாவான மனோஜ் குமார், கோவத்தில் சிறுவனை கண்டித்துள்ளார். இதனால் சிறுவன் கோவமாக இருந்துள்ளான்.
இந்நிலையில், சிறுவனை திட்டி விட்டு மனோஜ் குமார் டிவி பார்த்துள்ளார். இதையடுத்து, தன்னை கண்டித்ததால் கோபத்தில் இருந்த சிறுவன், சட்டென டிவியை ஆஃப் செய்துள்ளான். இதனால், ஆத்திரமடைந்த மனோஜ்குமார் அருகில் இருந்த சுத்தியலால் சிறுவனின் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். இதையடுத்து, தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், தப்பியோடிய சிறுவனின் தாய்மாமா மானோஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.