சூரிய கிரகணம் நாளில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு அடுத்த நாளான 25ம் தேதி சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. மாலை 5.10 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிரகணம் நிகழும் நாளன்று பொதுவாகவே கோயில்கள் அனைத்தும் அடைக்கப்படும். திருப்பதி கோயில் காலை முதல் இரவு 8 மணி வரை முடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அக்னி ஸ்தலம் என்பதால் சூரிய கிரகணத்தின் போது மூடப்படாது எனவும் வழக்கம் போல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் . சந்திர கிரகணத்தின்போதும் , கிரகணம் முடியும் போதுமத் கிரகணம் தொடங்கும் போது அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறும். 25ம் தேதி மாலை 5.10. மணிக்கு கிரகணம் தொடங்கும்போது கோவில் வளாகத்தில் 4ம் பிரகாரத்தில் தீர்த்த குளத்தில் நிகழ்ச்சி நடைபெறும் என்கோயில் அலுவலர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
வானத்தில் நடக்கும் அதிசய நிகழ்வான சூரிய கிரகணம் பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் வடகிழக்கு இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் கிரகணத்தை பார்க்க முடியாது. சூரிய அஸ்தமனத்திற்கு பின் கிரகணம் நிறைவுபெறுகின்றது. இதை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் 31 நிமிடங்கள் மற்றும் 12 நிமிடங்கள் வரை நீடிப்பதை பார்க்க முடியும். மும்பையில் இருந்து 4 முதல் 24 சதவீதம் வரை பார்க்க முடியும். வெறும் கண்காளால் பார்க்குமு் போது பார்வை இழப்பு மற்றும் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது இதனால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய முடியாது எனவும் கூறப்படுகின்றது.