தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தேர்வர்களுக்கு இலவச மாதிரித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- I பணிகளுக்கான தேர்வு வரும் 19ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனை அடுத்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரித்தேர்வு வரும் 13ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TNPSC Group 1 Mock Test இடம் மற்றும் நேரம்: ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி (Vinayaka Missions Pharmacy College) வளாகத்தில் மாதிரித் தேர்வு நடைபெறும்.
தேர்வு நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை கொண்டு வர வேண்டும். காலை 9.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மாதிரித் தேர்வுகள் தொடர்பான விவரங்களை 94900 55941 என்ற அலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.