fbpx

10 ரூபாய்க்கு T-Shirt..!! அதிகாலை முதலே அமோக கூட்டம்..!! சமாளிக்க முடியாமல் திணறிய போலீஸ்..!!

ராசிபுரத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் ரூ.10-க்கு டீ சர்ட் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், அதிகாலை முதலே கடை வாசலில் கூட்டம் கூடியது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கடைவீதி கன்னையா தெருவில் புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு கடை திறப்பு நாளில் 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரப்படுத்தி இருந்தனர். இந்நிலையில், 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் வாங்குவதற்காக கடையின் முன்பு அதிகாலை முதலே பலரும் கூடினர். கடை 8 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில், கடை திறப்பதற்கு முன்பே வாசலில் கூடிய இளைஞர்கள் போட்டிப் போட்டு கொண்டு டி சர்ட்டை வாங்கிச் சென்றனர்.

10 ரூபாய்க்கு T-Shirt..!! அதிகாலை முதலே அமோக கூட்டம்..!! சமாளிக்க முடியாமல் திணறிய போலீஸ்..!!

தொடர்ந்து கூட்டம் அதிகரிக்கவே அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களை சாலைகளிலேயே நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றுள்ளனர். மேலும், நூற்றுக்கு அதிகமானோர் கடை வாசலில் கூடியதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனை அறிந்த ராசிபுரம் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Chella

Next Post

காதலுக்கு சம்மதிக்காத பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண்! எரித்து கொலை செய்த தந்தை!

Mon Dec 26 , 2022
தற்போதைய இளம் தலைமுறையினருக்கு மீசை வருவதற்கு முன்னரே காதல் வந்து விடுகிறது. எது நல்லது, எது கெட்டது என்று தெரியும் வயது வருவதற்கு முன்னரே நாம் நினைப்பது அனைத்தும் சரிதான் என்ற முடிவிற்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் எடுக்கும் சில முடிவுகளால் பல விபரீதங்களை அவர்கள் சந்திக்க நேரிடும் போது தான் அவர்கள் எடுத்த முடிவின் விபரீதத்தை அறிந்து கொள்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா வசித்து வரும் […]
கள்ளக்காதலுக்கு இடையூறு..!! கணவர் கொலை..!! உடலை புதைத்த இடத்தில் செப்டிக் டேங்க்..!! பகீர் சம்பவம்..!!

You May Like