fbpx

தாயென நினைத்து பேருந்துடன் ஓடிய குட்டிக் குதிரை..! காண்போரை உருக வைத்த காட்சி..!

கோவையில் பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த குதிரையின் படத்தை பார்த்து நிஜ குதிரை என நினைத்து பின்னாலேயே ஓடிய குட்டிக் குதிரை காண்போரை மனம் உருக வைத்தது.

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே தர்ப்பணம் மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கூட்டத்தில் இருந்த தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்குச் சென்றதால் அதனை பிரிந்து குட்டிக் குதிரை தாய்க் குதிரையை தேடி வந்துள்ளது.

தாயென நினைத்து பேருந்துடன் ஓடிய குட்டிக் குதிரை..! காண்போரை உருக வைத்த காட்சி..!

இந்நிலையில், நேற்று பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் குதிரை உருவ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த அந்த குட்டிக் குதிரை பேருந்தை செல்லவிடாமல் சுற்றிச் சுற்றி வந்தது. சிறிது நேரத்தில் பேருந்து கிளம்பியதும் தாய்க் குதிரை இருப்பது போன்ற படத்தை பார்த்து பேருந்தை விடாமல் துரத்திச் சென்று கனைத்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் குட்டிக் குதிரையின் பாசத்தை பார்த்து மனம் உருகினர். காண்போரை கண் கலங்க வைக்கும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

ஓய்வு பெற்ற பிறகு மாதம் ரூ.50,000 பெற வேண்டுமா..? இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் போதும்..

Tue Sep 13 , 2022
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்க விரும்புகிறார்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வேலை நேரத்தில் சம்பளம் கிடைக்கும், ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் உண்டு ஆனால் தனியார் துறையில் இந்த வசதிகள் இல்லை. எனவே தனியார் துறையில் பணிபுரிந்து, ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை விரும்பினால், ‘தேசிய ஓய்வூதியத் திட்டம் சிறந்த தேர்வாக உள்ளது.. இந்தத் திட்டம் வருமான வரிச் சேமிப்பின் பலன்களைத் தருவது மட்டுமின்றி வேலையில் இருந்து […]
ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு..!! எந்த வங்கியில் தெரியுமா.? விவரம் உள்ளே..!!

You May Like