சென்னையில் சாப்பிட்ட பானிபூரிக்கு பணம் கொடுக்காமல் வடமாநில வியாபாரியை , இளைஞர் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
திருவல்லிக்கேனி ரோட்டரி நகரில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அமர்சிங் என்பவர் பானிபூரி விற்பனை செய்து வந்தார். அவரிடம் 26 வயதுடைய நபர் பானிபூரி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். அமர்சிங் அவரிடம் சாப்பிட்ட பானிபூரிக்கு காசு கொடுத்துவிட்டு செல்லுமாறு கேட்டுள்ளார். அப்போது முடியாது என அவர் மறுத்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் அகில் இருந்த கல்லை எடுத்து தாக்கினான். பின்னர் அவன் அங்கிருந்து தப்பிவிட்டான்.
வயிற்றில் உள்காயம் ஏற்பட்டது. சரியாகி விடும் என நினைத்து காயத்துடன் வீட்டுக் சென்ற அமர் திடீரென வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான் அமர்சிங்கிற்கு மண்ணீரலில் ரத்தக் கசிவு இருந்தது தெரியவந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.இந்நிலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது அவரிடம் வாக்குமூலம் பெற்று தேடியபோது அந்த நபர் 26 வயதான விக்னேஷ் என்பது தெரியவந்தது. அவன்மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் ல் சிகிச்சை பலனின்றி அமர்சிங் உயிரிழந்தார். ஏற்கனவே தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில் பிரேத பரிசோதனை முடிவுக்குப் பின் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். .