fbpx

”அடுத்த தலைமுறைக்காக சிந்திக்கும் கட்சி பாமக மட்டுமே”..! – அன்புமணி ராமதாஸ்

“தேர்தலுக்காக சிந்திக்கும் கட்சிகளுக்கு நடுவில் பாமக மட்டுமே அடுத்த தலைமுறைக்காக சிந்திக்கிறது” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் குரும்பட்டியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தருமபுரி மாவட்ட நிலத்தடி நீரில் புளூரைடு பாதிப்பு அதிகம் உள்ளது. காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றினால் புளூரைடு தாக்கம் குறையும், விவசாயமும் செழிக்கும். இந்தத் திட்டம் குறித்து முதலில் குரல் எழுப்பியது பாமக தான். தமிழகத்தை மாறிமாறி ஆண்ட மற்ற கட்சிகள் அடுத்த தேர்தலுக்காக சிந்தித்தபோது, பாமக மட்டுமே அடுத்த தலைமுறைக்காக, அவர்களின் வாழ்வு மேம்பட சிந்தித்தது. தற்போது அரசியல் செய்ய நான் இங்கு வரவில்லை. சுமார் 18 லட்சம் மக்கள் உள்ள மாவட்டத்தின் வாழ்வாதாரப் பிரச்சனைக்காக வந்துள்ளேன்.

”அடுத்த தலைமுறைக்காக சிந்திக்கும் கட்சி பாமக மட்டுமே”..! - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் காவிரியின் குறுக்கே மேட்டூரை தவிர தண்ணீர் தேக்கி வைக்கும் வசதி இல்லாததால் உபரிநீர் கடலுக்குத் தான் செல்கிறது. வீணாவதில் 3 டிஎம்சி தண்ணீரை தருமபுரி மாவட்ட தேவைக்கு கொடுத்தால், வாழ்வாதாரம் தேடி வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு சென்றுள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் திரும்புவர். தருமபுரி மாவட்டத்தில் கூடுதலாக 1 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று செழிப்படையும். இந்த திட்டத்தை நிறைவேற்றும் வரை தருமபுரி மாவட்ட மக்கள் விடமாட்டார்கள் என்று அரசு நினைக்கும் அளவுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். அதற்கும் அரசு தரப்பில் நடவடிக்கை இல்லை எனில் அடுத்தக்கட்ட போராட்டங்களை நடத்துவோம்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

குடி போதையில் நடந்த பயங்கரம்; தந்தையை மகனே அடித்துக் கொன்ற கொடூரம்..!

Sun Aug 21 , 2022
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜி (70). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பெருமாயி. இவர்களது மகன் கார்த்திக் (38). இவர் கோழி வண்டி லோடுமேனாக வேலை செய்து வருகிறார். கார்த்திக்குக்கு திருமணமாகி அவருடைய மனைவி கடந்த ஏழு வருடங்களுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். இதனால் கார்த்திக் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை […]

You May Like