fbpx

உயர்நீதிமன்றத்தில் தீக்குளித்த நபரால் பரபரப்பு ! ஜாதி சான்றிதழ் வழங்காததால் நடந்த துயரம்…

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் தன் மகனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு பல நாட்கள் போராடியுள்ளார். மாவட்டஅரசு அலுவலகம் , தாசில்தார் அலுவலகங்களுக்கு நடையோ நடை என நடந்துள்ளார். வருவாய் அலுவலகம் , கிராம நிர்வாக அலுவலகம் என மாறி மாறி சென்று சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்து மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.

மனம் நொந்து போன முருகன் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள சட்டமையம் வந்த அவர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்தனர். இருப்பினும் அவருக்கு பயங்கர தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

எதற்காக தற்கொலைக்கு முயற்சி செய்தீர்கள் என போலீசார் கேட்டதற்கு தன் மகனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு அலைகின்றேன். வெறுத்துவிட்டேன். நான் மாண்டாளாவது விடிவுகாலம் பிறக்கும் என நினைத்தேன். என அவர் கூறினார். 60 சதவீதம் தீக்காயங்களுடன் அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Post

ஆமணக்கு எண்ணை குடித்த பச்சிளங்குழந்தை உயிரிழப்பு ..!

Tue Oct 11 , 2022
ஆமணக்கு எண்ணெயை குழந்தைக்கு கொடுத்ததால் பச்சிளங்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஈச்சம்பட்டியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ்(36) . இருவருக்கும் முசிறி மலைப்பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் ஆனது. கடந்த 25 நாட்களுக்கு முன்புதான அழகான பெண் குழந்தையை இந்த தம்பதிபெற்றெடுத்தார்கள். தாய் வீட்டின் பராமரிப்பில் இருந்த இளம்பெண் குழந்தைக்கு இரண்டு நாளுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ,ஆமணக்கு எண்ணைணை வசம்புடன் கலந்து […]

You May Like