fbpx

நள்ளிரவில் நிர்வாண கோலத்தில் உலா வந்த வாலிபர்..!! சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி..!!

நாகர்கோவில் வடசேரியில் உள்ள தெரு ஒன்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் 35 வயது வாலிபர் ஒருவர், காரில் இருந்து நிர்வாண கோலத்தில் இறங்கினார். அப்படியே நடுரோட்டில் அங்கும், இங்கும் அலைந்த அவர், பின்னர் காரில் ஏறி சென்றார். இந்த கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. நிர்வாண கோலத்தில் தான் காரையும் ஓட்டி வந்துள்ளார். தெருவுக்குள் காரை நிறுத்தி பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்காக வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வாலிபர் நிர்வாணமாக நடமாடும் காட்சிகள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. நிர்வாணமாக இறங்கி உலா வந்த வாலிபர் யார்? காருக்குள் உண்மையிலேயே பெண் இருந்தாரா? அல்லது அந்த வாலிபர், காதலி வீட்டுக்கு செல்வதற்காக நிர்வாண நிலையிலேயே காரில் வந்தாரா? என்பன போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. காரில் இருந்து நிர்வாணமாக தள்ளாடிய படி செல்வதால் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

பெரும் சோகம்..!! மூத்த பாலிவுட் நடிகர் சதீஷ் கௌசிக் திடீர் மரணம்..!! திரையுலகினர் அதிர்ச்சி..!!

Thu Mar 9 , 2023
மூத்த பாலிவுட் நடிகரும் இயக்குனருமான சதீஷ் கௌசிக் காலமானார். அவருக்கு வயது 67. ஏப்ரல் 13, 1956ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்தார் சதீஷ் கௌசிக். இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் 1987ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான மிஸ்டர் இந்தியா மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும், ரூப் கி ராணி சோரோன் கா ராஜா, ஹம் […]
பெரும் சோகம்..!! மூத்த பாலிவுட் நடிகர் சதீஷ் கௌசிக் திடீர் மரணம்..!! திரையுலகினர் அதிர்ச்சி..!!

You May Like