விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ள தெற்கு ரயில்வே தற்போது வைகை விரைவு ரயிலின் வேகத்தை அதிகரித்து தேஜஸ் விரைவு ரயில் வேகத்திற்கு சீறிப்பாய்ந்தது.
மதுரை வைகை விரைவு ரயில் முதல்முறையாக சென்னைக்கு 6.34 மணி நேரத்தில் சென்று நிர்ணயிக்கப்பட்டதை விட 46 நிமிடங்களுக்கு முன்பாகவே இலக்கை அடைந்து சாதனைபடைத்துள்ளது .
மதுரை , திண்டுக்கல் போன்ற தென் மாவட்டங்களுக்குச்செல்லும் முக்கிய விரைவு ரயில் வைகை விரைவு ரயில் 1977 முதல் மதுரை –சென்னை இடையே இயக்கப்படுகின்றது. தினமும் காலை 7.10 க்கு மதுரையில் புறப்பட்டு மதியம் 2.30 ணிக்கு சென்னை அடையும். 7 மணி நேரம் 20 நிமிடங்கள் மொத்த பயண நேரமாகும்.
ஆனால் நேற்று முன்தினம் தாமதாக புற்பட்டது. இருந்தாலும் மதியம் 2.30க்கு பதில் 2.14க்கே சென்றடைந்தது.
மதுரை – னெ்னை இடையே 497 கி.மீ தூரத்தை 6 மணி நேரம் 34 நிமிடங்களில் சென்றடைந்துள்ளது. 46 நிமிடங்களில் இது முன்கூட்டியே அடைந்துள்ளது. இதன் மூலம் தேஜஸ் ரயில் வேகத்திற்கு இணையாக இயக்கப்பட்டுள்ளது அதாவது மதுரை சென்னை தேஜஸ் ரயில் 6 மணி நேரம் 15 நிமிடங்களில் செல்கின்றது. இதற்கு குறைவான நிறுத்தங்கள் ஆகும். 15 பெட்டிகளை கொண்டு இயக்குகின்றது.