தீபாவளிப் பண்டிகை என்பதால் போக்குவரத்து விதியை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படக்கூடது என அரசு அறிவித்துள்ளது..
குஜராத் அரசுஇது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளது. ’’ தீபாவளி நேரத்தில் மக்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் , அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.
குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டார். அதில் , ’’ தீபாவிளை ஒட்டி குஜராத்தில் வரும் 27ம் தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போலீசார் எந்த அபராதமும் விதிக்கமாட்டார்கள் இந்த நடவடிக்கை என்பது தீபாவளி நேரத்தில் மக்கள் தேவையில்லாத சிரமங்களை, மனக்கஷ்டத்தை சந்திக்க வேண்டாம் என்று முடிவெடுத்து இதை அறிவித்துள்ளோம். முதல்வர் பூபேந்திர படேல் அறிவுரையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 21ம்தேதி(இன்று) முதல் 27ம் தேதிவரை குஜராத் மாநிலத்தில் மக்கள் தெரிந்தோ அல்லது தவறுதலாகவோ போக்குவரத்து விதிகளை மீறிவிட்டால் அவர்களுக்கு போலீஸார் அபராதம் விதிக்கமாட்டார்கள். தலைக்கவசம் இல்லாமல், அல்லது ஓட்டுநர் உரிமம் இல்லாமல், பிற ஆவணங்கள் இல்லாமல் போலீஸாரிடம் சிக்கினால், அவர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தி, மலர் கொடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் தீபாவளி நேற்று கோவத்சா துவாதசியோடு தொடங்கியுள்ளது, வரும் 24ம் தேதி பிரதானமாக லட்சுமி பூஜை, தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாடப்படும்.
டிசம்பர் மாதத்தில் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக பல்வேறு வளர்ச்சித்திட்டங்களையும் அறிவிப்புகளையும் மத்தியில் ஆளும்பாஜக அரசு அறிவித்து வருகிறது. பிரதமர் மோடியும் கடந்த சில மாதங்களில் 6 முறை குஜராத்துக்கு பயணித்துள்ளார்.
ஏறக்குறைய 20ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது, இந்த முறையும் ஆட்சியைத் தக்கவைக்க பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்து செயல்படுத்தி வருகிறது.ஆனால், காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் கடும் சவால் அளித்து வருகிறார்கள். வளர்ந்து வரும் ஆம் ஆத்மியும், ராகுல் காந்தி நடைபயணத்தால் காங்கிரஸ் கட்சியும் எழுச்சியுடன் இருப்பதால், கடும் போட்டியிருக்கும் எனத் தெரிகிறது