தாலியை கழற்றியது கணவனுக்கு இழைக்கும் மோசமான கொடூரமான செயல் என்று சமீபத்தில் வெளி வந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய நிலையில் அப்படி ஒரு தீர்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவி தாலியை கழற்றியது தொடர்பாக தீர்ப்பு வந்தது. இதில் திடீர் திருப்பமாகதாலியை கழற்றியது கணவனுக்கு இழைத்த மோசமான கொடுமை என தீர்ப்பில் குறிப்பிடவே இல்லையே என நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த 2016ல் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மனைவி தாலியை கழற்றியதால் கணவனுக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டது. இது மட்டும் இன்றி அது மிகவும் மோசமான செயல் என குறிப்பிடப்பட்டது. ஆனால், இந்த வார்த்தைகள் எல்லாம் தீர்ப்பின் ஒரு அங்கம் என ஊடகங்களில் செய்திகள் வந்தது. ஆனால் அப்படி ஏதும் எந்த தீர்ப்பிலும் குறிப்பிடப்படவில்லை என தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி பேராசசிரியர் சிவக்குமார் குடுபம்பவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்திருந்த நிலையில் இவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதற்கு பின்பு அவர் மேல்முறையீடு செய்தார். இதன்மீது கடந்த ஜூலை 5ல் தீர்ப்பு கிடைத்தது.
அப்போது கணவன் நடத்தையின் மீது மனைவியின் சந்தேகம், கணவருக்கு தகாத உறவு இருப்பதாக, அவரது அலுவலக நண்பர்கள் முன் குற்றம்சாட்டுவது எந்தவித அடிப்படையும் இன்றி காவல்நிலையத்தில் கணவன் மீது புகார் கொடுத்தது மற்றும் இந்தப் பின்னணியில் மனைவியின் தாலியை கழற்றியது என புகார் அளிக்கப்பட்டது. இதனால் கணவர் மன உளைச்சல் ஏற்படுத்தி இருந்ததாக நீதிமன்றம் கருதியது. இதனால் இருவருக்கும் இணைந்து வாழ விருப்பமில்லை என்பதையே காட்டுகின்றது என கணவர் கோரிய விவாகரத்து மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளது.
2011 முதல் தம்பதியினர் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். எனவே மீண்டும் இணைய முயற்சி மேற்கொண்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது. தாலியை கழற்றுவது பெரும்பாலும் சம்பிரதாயத்துக்கு மாறான செயலாக பார்க்கப்படுகின்றது. தாலியை கழற்றியது மட்டுமே திருமண உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க போதிய காரணமாக கருதவில்லை. இவ்வாறுதான் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைய ஊடகங்கள் வேறு விதமாக கொந்தளிக்க வைத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.