பிக்பாஸில் இந்த சினிமா பிரபலம் இருக்க கூடாது, உடனடியாக அவரை வெளியேற்றுங்கள் என மகளிர் ஆணையத் தலைவி அனுப்பி கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இதே போல , இந்தியில் சல்மான் கான் பிக்பாஸ் சீசன் 16ஐ தொகுத்து வழங்குகின்றார். இது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகின்றது. கடந்த வாரம்அக்டோபர் 1ம் தேதி 14 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பம் ஆகியுள்ளது. இதில் சஜித்கான் என்ற பிரபல இயக்குனர் பங்கேற்றுள்ளார்.
விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியில் இவரால் மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது. மீ டூ என்ற இயக்கத்தின்போது பல்வேறு பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவரை உடனடியாக அதிலிருந்து வெளியேற்ற வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து , மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தையும் , பெண்கள் ஆணையத் தலைவர் சுவாதி மல்லிவால் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
குறிப்பிடப்பட்டுள்ள இந்த நபர் மீ டூ இயக்கத்தின்போது 10 க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என புகார் அளித்துள்ளனர். என இந்த பதிவில் மல்லிவால் குறிப்பிட்டுள்ளார். அந்த புகார்களும் சஜீத்தின் உண்மையான கேவலமான முகத்தை காட்டுகின்றது. இப்படிப்பட்ட ஒருவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரக்கூடாது உடனடியாக அவரை வெளியேற் றவேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என மல்லிவால் குறிப்பிட்டுள்ளார்.