fbpx

தெரு நாயை துன்புறுத்திய கஞ்சா போதை ஆசாமி… நாய் திடீர் உயிரிழப்பு!

தெருநாய்க்கு நடந்த கொடுமை… போதை ஆசாமியின் வெறிச்செயல் : திருப்பூரில் பயங்கரம்!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, வேலாயுதம்பாளையம பகுதியை சேர்ந்தவர் தஸ்தகீர். சரி வர வேலைக்கு செல்லாமல் கஞ்சா போதையில் அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மது மற்றும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் தஸ்தகீர், அப்பகுதியில் உள்ள தெரு நாயை பிடித்து துன்புறுத்தியதால் நாய் தஸ்தகீரை கடித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தஸ்தகீர் நாயின், பின்னங்கால்களை கயிற்றால் கட்டி, கட்டையால் கடுமையாக தாக்கியதில் நாய் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை பார்த்த அவ்வழியே சென்ற நபர் ஒருவர் இதனை விடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, காளீஸ்வரி என்பவர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கஞ்சா போதையில் நாயை கொன்றதாக தஸ்தகீரை அவிநாசி போலீசார் கைது செய்தனர்.

Rupa

Next Post

Election 2024 | பாஜக-வில் இணைந்த கேப்டன் விஜயகாந்த் பட நடிகை.!! மகாராஷ்டிரா, அமராவதி தொகுதியில் போட்டி.!!

Thu Mar 28 , 2024
Election: கேப்டன் விஜயகாந்த் படத்தில் கதாநாயகியாக நடித்த நவ்நீத் ராணா என்பவர் பாஜகவில்(BJP) இணைந்து இருக்கிறார். இவர் பாராளுமன்றத் தேர்தலில் மகராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி தொகுதியில் போட்டியிட உள்ளார். 18-வது பாராளுமன்றத் தேர்தல்(Election) தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ளிட்ட பகுதிகளில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த பொது தேர்தல் வாக்குப்பதிவுகள் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் […]

You May Like