சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது சகோதரர்களின் 221வது நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றிய , சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் 221வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகின்றது. இதை ஒட்டி ஏராளமான கட்சித் தலைவர்கள் அமைப்புகள் அவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.
மருது பாண்டியர் நினைவு நாளை ஒட்டி, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்துள்ளனர். சிவகங்கை , தேவகோட்டை , இளையான் குடி , மானாமதுரை , காளையார் கோவில் , திருப்புவனம் தாலுகாவில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.