விருந்துக்கு சென்றபோது அப்படியோ ஆற்றில் குளித்துவிட்டு வரலாம் என நினைத்து சென்ற புதுமணத்தம்பதியினர் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பொம்மை கவுணடன் பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (30 ) . இவரது மனைவி காவியா (20) ஒருமாதத்திற்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. புதுமணத் தம்பதிகள் போடியில் அவர்களின் ஊரியில் இருந்து சற்று தொலைவில்உள்ள ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றனர். பெரியாற்று கோம்பை என அழைக்கப்படும் ஆற்றல் குளித்து விட்டு வரலாம் என உறவினர் சஞ்சய் மற்றும் அவரது மகன் ஆகியோர் சென்றுள்ளனர்.
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீர்வரத்து திடீரென அதிகரித்ததால் ராஜா ஒரு சிறு பாறையின் மீது நின்று கொண்டிருந்தபோது வழுக்கி விழுந்தார். உடன் இருந்த சிறுவனும் விழுந்தான். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு சஞ்சய் மற்றும் காவியா காப்பாற்ற சென்றனர். ஆனால் 3 பேரையும் சுழல் அடித்துச் சென்றது. சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினான்.
தகவல் அறிந்த போலீசார் தீயணைப்புத்துறையினர் ஆகியோர் வந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இறுதியில் 3 பேரின் உடல் மட்டுமே கிடைத்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.