fbpx

தொழில் தொடங்க விருப்பமா..? மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்..!! ரூ.5 கோடி வரை..!! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!

திருப்பூர் மாவட்டத்தில் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் கீழ் முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்க மானியத்தொடு வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வழங்கப்படுகிறது.

தொழில் தொடங்க விருப்பமா..? மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்..!! ரூ.5 கோடி வரை..!! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!

இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொது பிரிவினர் 21 வயது முதல் 31 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவு பெண்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் உள்ளிட்டவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் கல்வித் தகுதியாக 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், இணைய விருப்பம் உள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in/ needs என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம் புதூர், திருப்பூர் என்ற முகவரி அல்லது 0421-2475007 மற்றும் 9500713022 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Chella

Next Post

நாடு முழுவதும் பராமரிப்பு பணி காரணமாக இன்று 307 ரயில்கள் ரத்து...!

Tue Jan 24 , 2023
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 307 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 307 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 74 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் கணக்குகளில் பணம் […]

You May Like