fbpx

உயர்ரக செல்போன் வாங்க ஆசை … பணமில்லாததால் கடத்தல் நாடகம் போட்ட மாணவர்கள்.. கையும் களவுமாக போலீசில் பிடிபட்டனர்…

உயர்ரக செல்போன் வாங்க ஆசைப்பட்ட பள்ளி மாணவர்கள் கடத்தல் நாடகம் போட்டு தன் தந்தையை மிரட்டி பணத்தை பறிக்க முயன்றபோது போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டனர்.

வேலூர் மாவட்டம் கொணவட்டத்தில் வசித்து வரும் வியாபாரி வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று இரவு வெளியே சென்ற மாணவன் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் பெற்றோர் இங்கும் அங்கும் அலைந்து திரிந்து தேடியபோது எங்கும் கிடைக்கவில்லை. நண்பர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ஆளைக் காணவில்லை.

பதறிபோன நிலையில் இரவு 12 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய சிறுவன் உன் மகனை நான்தான் கடத்தி வைத்துள்ளேன். ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு உன் மகனை கூட்டிச் செல் என மிரட்டிவிட்டு போனை வைத்துவிட்டான். இதனால் பதறிப்போன தாய் கணவரிடம் தெரிவித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

உடனடியாக தேடுதல் வேட்டையை தொடங்கிய காவல்துறையினர். அடுத்த அழைப்பு வரும் வரை காத்திருந்தனர். அடுத்த அழைப்பு வந்தது. அதில் சிறுவன் பேசினான். காட்பாடி சதுப்பேரி பகுதிக்கு வா என கூப்பிட்டனர். அங்கு சென்றதும் இடத்தை மாற்றிவிட்டோம் கொணவட்டத்திற்கே வா என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தனர்.

மீண்டும் கொணவட்டம் வந்தனர். போலீசாரின் அறிவுறுத்தல்படி பணத்திற்கு பதிலாக செங்கற்களை அதில் வைத்து பையை தயாராக வைத்திருந்தனர். மீண்டும் அழைப்பு வந்தது. அங்குள்ள இருள் சூழ்ந்த இடத்திற்கு பையை வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் போ உன் மகன் வருவான் எனக் கூறி அழைப்பை அந்த சிறுவன் துண்டித்தான்.

அதே போல அந்த பையை இருள் சூழ்ந்த பகுதியில்வைத்துவிட்டு அவரது தந்தை சென்றார். அப்போது இரண்டு மாணவர்கள் வந்து சந்தோஷமாக பையை எடுத்தனர். பின்னால் சென்ற போலீசார் இரண்டு மாணவர்களையும் கையும் களவுமாக பிடித்தனர். வெளிச்சத்துக்கு வந்து பார்த்தபோது 15 வயதில் ஒரு மாணவனும், மற்றொரு பக்கம் காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவனும் இருந்தான். இதைக் கண்டு போலீசார் அதிர்ந்து போனார்கள். அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த மாணவன் கூறுகையில் ’ என் அப்பா ஒரு பயந்தாங்கோலி அவரை ஏமாற்றி பணம் வாங்கிவிடலாம். அவரை மிரட்டினால் பணம் தருவார் என நினைத்தேன். செல்போன் வாங்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை . ஆனால் அதற்கான பணம் என்னிடம் இல்லை. இதனால்தான் நான் இவ்வாறு செய்தேன்.’’ என கூறினார். இதையடுத்து மாணர்களை எச்சரித்துவிட்டு இனி இது போன்ற தவறை செய்யக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

Next Post

மாடு குறுக்கே வந்ததால் வந்தே பாரத் ரயில் 4-வது முறையாக விபத்து!!

Sat Oct 29 , 2022
ஒரே மாதத்தில் 4-வது முறையாக வந்தே பாரத் ரயில் மாடு மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் கடந்த மாதம் 30 ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. குஜராத் – காந்தி நகர் இடையே செல்லும் ரயில் முதல் நாளே  பசுமாடுகள் மீது மோதியது. அடுத்த நாளே 2வது முறையாக எருமை மாடுகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் […]

You May Like