fbpx

மாத்திரை அட்டையில் திருமண அழைப்பிதழ்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

மாத்திரை அட்டை பின்பக்க வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள வெவ்வேறு தனியார் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்குத் திருமணம் முடிவாகியுள்ளது. அவர்கள் மருத்துவம் சார்ந்த துறையில் பணியாற்றுவதால் அந்த துறை சார்ந்து தங்களின் அழைப்பிதழை வடிவமைக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், அந்த மாத்திரைக்கு எழில் வசந்தா எனப் பெயரிட்ட அந்த ஜோடி, மாத்திரை எங்கு உருவாக்கப்பட்டது யாரால் உருவாக்கப்பட்டது எந்த இடத்தில் உருவாக்கப்பட்டது என அனைத்து விவரங்களையும் அந்த அழைப்பிதழில் வரிசைப்படுத்தியுள்ளனர். ஆனால், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தங்களின் திருமணம் மற்றும் வரவேற்பு சார்ந்த அனைத்து விவரங்களையும் அவர்கள் அதில் கொடுத்துள்ளனர்.

மாத்திரை அட்டையில் திருமண அழைப்பிதழ்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ள இந்த அழைப்பிதழை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அதில், எச்சரிக்கை எனக் குறிப்பிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தவறாமல் வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவுக்குச் சிலர், எல்லாம் சரி..! மாத்திரை அட்டையில் யூஸ் பை தேதி எங்கே என நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Chella

Next Post

FTX கிரிப்டோ கோப்பை செஸ்..! தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்தார் பிரக்ஞானந்தா..!

Fri Aug 19 , 2022
FTX கிரிப்டோ கோப்பை ரேபிட் செஸ் போட்டியில் அமெரிக்க வீரரை தோற்கடித்து இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்தார். அமெரிக்காவின் மியாமியில் FTX கிரிப்டோ கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க வீரர் ஹான்ஸ் நீமனை எதிர்கொண்டார். கடுமையான சவால் அளித்த நீமனே வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம் 64வது காய் நகர்த்தலில் பிரக்ஞானந்தா […]
FTX கிரிப்டோ கோப்பை செஸ்..! தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்தார் பிரக்ஞானந்தா..!

You May Like