fbpx

’என் பெயரை ஏன் வாசிக்கவில்லை’..!! ’வேலை காலியாகிவிடும்’..!! உதவி பொறியாளரை மிரட்டிய திமுக எம்எல்ஏ..!!

தன் பெயரை வாசிக்காமல் விட்ட அதிகாரியை ‘வேலை காலியாகிவிடும்’ என திமுக எம்.எல்.ஏ. செல்வராஜ் மிரட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பூலுவபட்டியில் நடைபெறும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் உதவி பொறியாளர் ராஜா, ஆட்சியர் வினீத், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் உள்ளிட்டோரின் பெயரை வாசித்தார். அப்போது திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. செல்வராஜ் பெயரை உதவி பொறியாளர் வாசிக்கும்போது கூறாமல் விட்டு விட்டார். மற்றவர்கள் பெயரைக்கூறினார். இதனால் ஆவேசமடைந்த எம்.எல்.ஏ, ‘எப்படி என் பெயரை கூறாமல் விடலாம். புகார் தெரிவித்தால் வேலை காலியாகி விடும்’ என அந்த அதிகாரியை மிரட்டினார். அதற்கு அவர் ‘சாரி’ என்று கூற ‘மண்ணாங்கட்டி சாரி’ என ஆவேசப்பட்டார்.

’என் பெயரை ஏன் வாசிக்கவில்லை’..!! ’வேலை காலியாகிவிடும்’..!! உதவி பொறியாளரை மிரட்டிய திமுக எம்எல்ஏ..!!

அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ., உதவி பொறியாளரிடம் ஆவேசப்பட்ட போது அமைச்சர், ஆட்சியர் ஆகியோர் மௌனமாக அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அதிகரிக்கும் குரூப் 4 காலியிடங்கள்..!! கட் ஆஃப் மதிப்பெண்களில் அதிரடி மாற்றம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

Sun Dec 25 , 2022
குரூப் 4 தேர்வில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையில் திருத்தம் கொண்டு வர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அறிவிக்கப்பட்ட காலியிடங்கள்… கிராம நிர்வாக அலுவலர் பதவியின் கீழ் 274 காலியிடங்களும், குரூப் 4 நிலை பதவியின் கீழ் 6,864 பணியிடங்களும், பல்வேறு வாரியங்களில் கீழுள்ள பதவிகளின் கீழ் 163 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டன. எனவே, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 7301 ஆகும். புதுகாலியிடங்கள் எண்ணிக்கை… புதுகாலியிடங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ […]

You May Like