fbpx

காட்டி கொடுங்கள்.. 200 ரூபாய் வெல்லுங்கள்… வேலூர் மாநகராட்சி அறிவித்த திட்டம் …

திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின் கீழ் மாநகராட்சியில் யாராவது குப்பைகளை தெருக்களில் கொட்டினால் ஆதாரத்தோடு காட்டி கொடுத்துவிட்டு ரூ.200 அன்பளிப்பாக பெறுங்கள் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளன..

தெருக்கள் மற்றும் கழிவுநீர்கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையை கொட்டினால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும். வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும். அதேநேரம், குப்பையை தெருக்களில் கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு அன்பளிப்பாக ரூ.200 அளிக்கவுள்ளனர். இந்த புதிய நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.

Next Post

’யாரு சாமி நீங்க’..!! ’வாட்ச் அனுப்ப சொன்னா வறட்டிய அனுப்பி வச்சிருக்கீங்க’..!! Flipkart பரிதாபங்கள்..!!

Tue Oct 11 , 2022
அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதில் வேறு பொருட்களை அந்நிறுவனங்கள் அனுப்பும் சம்பவம் அண்மைக் காலமாக தொடர்ந்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது இம்மாதிரியான சமயங்களில் அதிருப்தியில் இருப்பார்கள் அந்தவகையில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் கைக்கடிகாரம் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், பார்சலில் வந்ததோ மாட்டுச்சாணம். உத்தரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள […]
’யாரு சாமி நீங்க’..!! ’வாட்ச் அனுப்ப சொன்னா வறட்டிய அனுப்பி வச்சிருக்கீங்க’..!! Flipkart பரிதாபங்கள்..!!

You May Like