fbpx

மருமகனின் தம்பியுடன் சேர்ந்து தாய் செய்த அசிங்கமான செயல்.. விரக்தியில் மகள் தற்கொலை.

பண்ருட்டி அடுத்த அங்கு செட்டி பாளையம், புதுநகரை சேர்ந்தவர் 40 வயதான ஜெயமாலா. செங்கல் சூளையில் கூலி தொழில் செய்து வரும் இவரது கணவர் சக்திவேல், கடந்த 5ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார். இவருக்கு ஜெகன் பிரியா, சத்யபிரியா ஆகிய 2 மகள்களும், கிரி என்ற மகனும் உள்ளனர். இவரது மூத்த மகள் ஜெகன் பிரியாவிற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், மூத்த மருமகனின் தம்பி ரூபன், ஜெயமாலா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். உளுந்தூர்பேட்டையில் போலீசாக உள்ள ரூபன், வழக்கம் போல் கடந்த 3-ந் தேதி இரவு ஜெயமாலா வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கு அவர்களிடம் தகராறில் ஈடுபட்ட ரூபன், இரவு அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் ரூபன் வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில், துப்பட்டா துணியால் சத்திய பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சத்யபிரியாவின் தம்பி கிரி, புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சத்திய பிரியாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தாயாரும் தாயாரின் கள்ளக்காதலன் ரூபனும் சத்திய பிரியாவை தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Maha

Next Post

“எங்க அம்மாவையே அடிப்பியா?” தந்தையை துடிதுடிக்க கொலை செய்த மகன்..

Fri Oct 6 , 2023
ராணிபேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த மேல்வேலம் கிராமம் பஜனை கோவில் தெரிவைச் சேர்ந்தவர் 50 வயதான கோபி. கட்டிட மேஸ்திரியான இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 26 வயதான யுவராஜ் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக, கோபி சரியாக வேலைக்கு செல்லாமல், அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், அவரது மனைவி வேலைக்கு செல்லுமாறு கோபியிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபி மஞ்சுளாவிடம் […]

You May Like