திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் முழு விவரங்கள்…
நிறுவனம் / அமைப்பின் பெயர் | ஆவின் |
பதவி | கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி (Veterinary consultant) |
மொத்த காலியிடங்கள் | 8 |
நேர்காணல் தேர்வு | இந்த பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 14.12.2022 அன்று நடைபெறும் நேரடி நியமன தேர்வில் (Walk-in-interview) கலந்து கொள்ளலாம். |
கல்வித் தகுதி | கால்நடை மருத்துவ படிப்பு B.V.SC & A.H with Computer Knowledge |
ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 14ஆம் தேதி உரிய படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
முகவரி: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை, திருப்பூர் – 641 605.