சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டுவது போல் வீடியோ வெளியான விவகாரத்தில் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ நேற்று வைரலானது. பள்ளி சீருடையில் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த மாணவிக்கு மாணவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டும் வீடியோ நேற்று பேசு பொருளாக இருந்தது. பள்ளி படிக்கும் வயதில் மாணவர்களின் இது போன்ற செயல் பிற பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது. நேற்று புதுமாப்பிள்ளையாக இருந்த நிலையில் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பெராம்பட்டு பகுதியைச் சேர்ந்த தலமேடு கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி என்பது உறுதியானது. தாலி கட்டிய மாணவன் சிதம்பரம் அருகே வடகரிராஜ புரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மாணவனை கைது செய்து குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.