கள்ளக்காதலை கைவிட சொன்னதால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் காட்டூரைச் சேர்ந்த பெண் ஒருவர், திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். பெண்ணின் கணவர் சமையல்காரர் என்பதால் அவர் அடிக்கடி சமையல் வேலைக்காக வெளியே சென்றுவிடுவார். அந்த சமயத்தில், வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. கணவன் வேலைக்கு வெளியே செல்லும் நேரங்களில் எல்லாம் அந்த வாலிபரை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததும் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அதையும் மீறி அந்தப் பெண் வாலிபருடன் தொடர்ந்து ஜாலியாக இருந்துள்ளார்.
சம்பவத்தன்று இனிமேல் கள்ள உறவு வைக்கக் கூடாது. கள்ளக்காதலனை மறந்து விட வேண்டும் என்று கண்டிப்பு காட்டி சொல்லியிருக்கிறார் கணவர். அதை செய்ய மறுத்திருக்கிறார் மனைவி. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரத்தில் கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் மன உளைச்சலில் இருந்த அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசா,ர் அந்த பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.