கும்பல் கும்பலாக அதிமுகவில் இணையும் திமுக, தவெக நிர்வாகிகள்..!! செம குஷியில் எடப்பாடி பழனிசாமி..!!

Politics 2026

மயிலாடுதுறை நகராட்சிப் பகுதிகளில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று அதிமுகவில் இணைந்தனர். நகராட்சியின் 26 மற்றும் 27 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், அனீஷ் மற்றும் மைக்கல்ராஜ் ஆகியோர் தலைமையில் திரண்டு வந்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டது மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவிற்கு, மாவட்ட செயலாளர் எஸ். பவுன்ராஜ் தலைமை தாங்கினார். மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி வந்த இளைஞர்களைக் கட்சித் துண்டு அணிவித்து வரவேற்ற அவர், அதிமுகவின் கொள்கைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் அதிக அளவில் இணைந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அடிமட்ட தொண்டர்கள் மற்றும் இளைஞர்களின் இந்த அணிமாற்றம் அதிமுகவின் களப்பணியை அந்தப் பகுதியில் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புதிய கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்தும் இளைஞர்கள் விலகி அதிமுகவை நோக்கி வருவது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : 30+ வயதில் கருத்தரிக்கும் பெண்கள்..!! இயற்கை முறையில் கருத்தரிப்பது சாத்தியமா..? மருத்துவர் கூறும் முக்கிய ஆலோசனைகள்..!!

CHELLA

Next Post

7 வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்..!! 1200 ஆண்டு பழமையான வல்லக்கோட்டை முருகனின் மகிமை..!!

Mon Feb 2 , 2026
ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சுமார் 1200 ஆண்டுகள் பழமையான ஒரு புண்ணிய பூமியாக திகழ்கிறது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகழ்பெற்ற முருக வழிபாட்டுத் தலமான இங்கு, கருவறையில் முருகப்பெருமான் சுமார் 7 அடி உயரத்தில், வள்ளி மற்றும் தேவசேனாவுடன் கம்பீரமாகக் கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்திற்கு ‘வல்லக்கோட்டை’ என்ற பெயர் […]
Murugan 2026

You May Like