“திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னம்.. பிரதமர் மோடி சொன்னது உண்மை தான்..!” முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

TN CM MK Stalin BJP State president Annamalai 1

பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, தென்னிந்திய மாநிலங்களில் பீகார் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பேசினார்.. தமிழ்நாட்டில் திமுக பீகாரிகளை துன்புறுத்துகிறது என்றும் குற்றம்சாட்டினார்.. மேலும் “ காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக தமிழ்நாட்டில் பீகார் மக்களை துன்புறுத்தி வருகிறது.. அங்கு பீகாரிகள் தவறாக நடத்தப்படுகின்றனர்.. இது பீகாரின் உழைப்புக்கு இழைக்கப்பட்ட அவமானம்..” என்று பேசியிருந்தார்..


பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.. மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் “ இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி
அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒடிசா – பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்..

இந்த நிலையில் முதல்வரின் இந்த விமர்சனத்திற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின்..

உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்கள் கூறியது முழுக்க முழுக்க உண்மை. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி. ஆர். பி. ராஜா, எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள்.

முதலமைச்சர் திரு.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், தமிழகத்தில், பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது. எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் அவர்கள் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, திரு ஸ்டாலின் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : 1 கோடி அரசு வேலைவாய்ப்புகள், கோடீஸ்வர பெண்கள் : பீகார் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக!

RUPA

Next Post

அண்ணனை போக்சோ வழக்கில் சிக்க வைத்ததால் ஆத்திரம்.. உளுந்தூர் பேட்டையை திக்குமுக்காட வைத்த பகீர் சம்பவம்..!! என்ன நடந்தது..?

Fri Oct 31 , 2025
Murder in Ulundur Pettah after brother was implicated in POCSO case..
murder

You May Like