திமுக மாநிலங்களவை எம்பி கிரிராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கேசி வீரமணி, சி, காமராஜ், கே.பி அன்பழகன் மற்றும் இபிஎஸ் உறவினர் சேலம் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ சத்யநாராயணன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது மனுவி; “ எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.. அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கமணி, சி. விஜயபாஸ்கர், கே.பி அன்பழகன், கே.சி வீரமணி உள்ளிட்டோர் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.. லஞ்சஒழிப்புத்துறை சேகரித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடியும்..
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் உள்ளதால் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது..” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த 7 பேர் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.



