தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
திமுக மக்களவை மாநிலங்களவை – உறுப்பினர்கள் கூட்டத் தீர்மானங்கள்
மாநில உரிமைகளை மதிக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்கும் -ரயில் திட்டங்களிலும் நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதற்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் – விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத்துக்கு அனுமதி வேண்டும்!
கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவுக்காக நாடாளுமன்றத்தில் குரல்!
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திடுக!
நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்திடுக!
கல்வியில் காவிக் கொள்கையைத் திணிக்காமல், ரூ.3548.22 கோடி சமக்ர சிக்ஷா நிதியை விடுவித்திடுக!
நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது!
இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு அவசியம்!
ஆசிரியர் தகுதித் தேர்வில் 23.8.2010-பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வைப் பாதுகாக்க வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை முடக்காமல், தமிழ்நாட்டுக்கான ரூ.1290 கோடியை உடனடியாக வழங்குவதோடு, இந்தாண்டும் 30 கோடி மனித நாட்களுக்கான பணி அனுமதியை வழங்க வேண்டும்.
Read More : நெருங்கும் டிட்வா.. இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. கனமழை வெளுத்து வாங்கும்..!



