தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாண சுந்தரம் எம். பி கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடித்துவிட்டது.. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. மறுபுறம், நிர்வாகிகள் நீக்கம், புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன..
அந்த வகையில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாண சுந்தரம் எம். பி கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சாக்கோட்டை க அன்பழகன் திமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கல்யாண சுந்தரம் “திருமணமாகி 10 மாதம் கழித்தே குழந்தை பிறக்க்கும், அன்றே பிறந்தால் வேறுவிதமாகிவிடும், முன்கூட்டியே கர்ப்பமானால் தான் திருமண நாளில் குழந்தை பிறக்கும்..” என்று தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : சரோஜா தேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது.. CM ஸ்டாலின் இரங்கல்..